2 14 1 scaled
உலகம்செய்திகள்

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

Share

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்:100 விமானங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளின் வான் தாக்குதலும் சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

அதிலும் ரஷ்ய தலைநகர் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் சமீபத்தில் நாட்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட கருத்தில், ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதனால் கிட்டத்தட்ட 100 விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன.

இது தொடர்பாக மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ள தகவலில், நகரை நோக்கி வந்த உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, இதனால் 103 விமானங்கள் ரஷ்ய தலைநகரில் இருந்து வெளியேற முடியாமல் போனது.

வ்னுகோவோவில் இருந்து பிற புறப்பட வேண்டிய 34 விமானங்கள் இதனால் தாமதம் ஆனதுடன், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல  டொமோடெடோவோவில் 63 விமானங்கள், ஷெரெமெட்டியோவில் 6 விமானங்கள் தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...