உலகம்செய்திகள்

இரகசியம் ஒன்றை வெளிப்படுத்திய நபர் அடித்துக் கொலை

Share
23 6545e9358ac0c
Share

இரகசியம் ஒன்றை வெளிப்படுத்திய நபர் அடித்துக் கொலை

களுத்துறையில் இருவருக்கு இடையேயான இரகசியக் காதலை வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே உயிரிழந்தவர் இந்த உறவை வெளிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசித்து வந்த 67 வயதான ரமோன் ஜயதிஸ்ஸ என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...