tamilni 119 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Share

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான உயிரிழந்த மாணவியின் 19 வயதுடைய நண்பர் மற்றும் அவரது காதலன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாகொட பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் 06.05.2023 அன்று பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்த நிலையில், பின்னர் மாடியிலிருந்து குதித்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...