1 10 1 scaled
உலகம்செய்திகள்

17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்:  ஒருவர் கைது

Share

17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்:  ஒருவர் கைது

ஜேர்மன் பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மாயமான வழக்கில், சுமார் 17 வருடங்கள் கழித்து தற்போது ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள Lismore நகரில், தன் நண்பர்களுடன் இரவில் வெளியே சென்றிருந்த Simone Strobel (25) என்னும் ஜேர்மன் இளம்பெண், மர்மமான முறையில் மாயமானார். அவர் பவேரியாவிலுள்ள Würzburg நகரைச் சேர்ந்தவர் ஆவார்.

ஆறு நாட்களுக்குப் பிறகு, சற்று தொலைவில் அமைந்திருந்த விளையாட்டு வளாகம் ஒன்றில், பனை ஓலைகளின் கீழ் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், கடந்த செவ்வாயன்று, Simone கொலை வழக்கு தொடர்பாக 42 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு, அவுஸ்திரேலிய அதிகாரிகள், Simone மரணம் தொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த கைது சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...