உலகம்
ஜேர்மன் நகரமொன்றில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை
ஜேர்மன் நகரமொன்றில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை
ஜேர்மன் நகரமொன்றில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்க்க, அதை சுத்தம் செய்ய 250 தீயணைப்புத்துறையினர் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜேர்மனியின் Reutlingen நகரில் இடி மின்னலுடன் புயலடித்ததுடன், ஆலங்கட்டி மழையும் பொழிந்தது.
வானிலிருந்து விழுந்த பனிக்கட்டிகளின் அளவு சிறியதுதான் என்றாலும், எக்கச்சக்கமாக பனிக்கட்டிகள் மழையாகப் பொழிந்ததால், சுமார் ஒரு மணி நேரத்துக்குள் பார்க்கும் இடமெல்லாம் பனிக்கட்டிகளாக காட்சியளித்தது.
வீட்களின் அடித்தளங்கள், கார் பார்க்கிங் என எல்லா இடத்திலும் பனிக்கட்டிகளாக குவிய, அவற்றை அகற்ற தீயணைப்புத்துறையினர் அழைக்கப்பட்டனர்.
அந்த பனிக்கட்டிகளை அகற்ற 250 தீயணைப்பு வீரர்கள் தளராமல் வேலை செய்யவேண்டியிருந்தது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: 17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்: ஒருவர் கைது - tamilnaadi.com