உலகம்
ஜேர்மன் சேன்ஸலர் சந்தித்த விபத்து: அரசுப் பணிகள் தடைபடுமா?
Published
1 வருடம் agoon
ஜேர்மன் சேன்ஸலர் சந்தித்த விபத்து: அரசுப் பணிகள் தடைபடுமா?
ஜேர்மன் சேன்ஸலர் சிறிய விபத்தொன்றை சந்தித்ததாக ஜேர்மன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியில் ஜாகிங் சென்ற ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், கீழே விழுந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் பங்கேற்க இருந்த பல நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.
வாரம் முழுவதும் சேன்ஸலர் ஷோல்ஸுக்கு பல அரசுப் பணிகள் உள்ள நிலையில், இந்த விபத்தால் அவை தடைபடுமா என கேள்வி எழ, சேன்ஸலர் கீழே விழுந்ததால் அவரது முகத்தில் கீறல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் அவர் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை அவர் நாடாளுமன்றத்தின் கீழவையில் பட்ஜெட் தொடர்பில் உரையாற்ற உள்ளார்.
முக்கியமாக, வெள்ளிக்கிழமை, சேன்ஸலர் ஷோல்ஸ் இந்தியா செல்கிறார். இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் G 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஷோல்ஸ் இந்தியா செல்கிறார்.
ஜேர்மனியின் ஒரு திட்டத்தை பின்பற்ற பிரான்ஸ் ஜனாதிபதி விருப்பம்