இந்தியா
பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை
Published
1 வருடம் agoon
பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை
ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு இந்திய தம்பதியரின் குழந்தை, அதிகாரிகளால் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், பிள்ளையை இந்தியாவுக்கு அனுப்பக் கோரி ஜேர்மன் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது செப்டம்பர் 3ஆம் திகதி, ஜேர்மனியின் Mannheim நகரத்திலுள்ள Paradeplatz என்னுமிடத்தில் ஜேர்மன் வாழ் இந்தியர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடி அவர்களே, குழந்தை அரிஹாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி ஜேர்மனிக்கு சொல்லுங்கள் என்றும், ஜேர்மனி, அரிஹாவை இந்தியாவுக்கு அனுப்பு என்றும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகளும் பங்கேற்றனர்.
ஏழு மாதக் குழந்தையான அரிஹா தனது பெற்றோருடன் ஜேர்மனியில் வாழ்ந்துவரும்போது அவள் தாக்கப்பட்டதாகக் கூறி, ஜேர்மன் இளைஞர் நல அலுவலகம் பிள்ளையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.
அரிஹாவின் பெற்றோரான தாராவும் பவேஷ் ஷாவும் இந்தியா திரும்பிவிட்ட நிலையிலும், இப்போது இரண்டு வயதைக் கடந்துவிட்ட அரிஹா ஜேர்மனியிலேயே இருக்கிறாள்.
அரிஹா தாக்கப்பட்டது தொடர்பாக தாரா, பவேஷ் தம்பதியர் மீது பதிவுசெய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் விலக்கிகொள்ளப்பட்ட பின்பும், ஜேர்மன் அதிகாரிகள் குழந்தையை இந்தியாவுக்கு அனுப்பவில்லை.
குழந்தையை அதன் பெற்றோர்தான் தாக்கினார்களா என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், குழந்தை மோசமாக தாக்கப்படிருந்தது உண்மை என்று கூறும் ஜேர்மன் அதிகாரிகள், அரிஹாவின் பெற்றோர் குழந்தையின் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார்கள் என்கிறார்கள்.
இந்திய அரசு அரிஹாவை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
You may like
ஐரோப்பிய நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மார்பர்க் வைரஸ்: ஜேர்மனியில் மூடப்பட்ட தொடருந்து நிலையம்
கனடாவில் அதிகரித்த வெளிநாட்டு தொழிலாளர்கள் எண்ணிக்கை… அரசு எடுத்த அதிரடி முடிவு!
புதிய வகை கொரோனா தொற்று: இதுவரை 27 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்
பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள்
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியில் தீவிரம் பெறும் வலதுசாரிகளின் ஆதிக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் நாடுகடத்தியுள்ள ஜேர்மனி
ஜேர்மனிய மாகாணமொன்றில் நெருங்கும் தேர்தல் : அரசியல்வாதி மீது நிறப்பூச்சு வீச்சு
உயிருக்கு அச்சுறுத்தல்… கனடாவில் சீக்கிய சமூக ஆர்வலருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்
ஜேர்மனில் வெகுவாக அதிகரித்துள்ள சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை