கடந்த இரண்டு நாட்களில், இந்திய விமானிகள் இருவர் உயிரிழந்த விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது.
நேற்று முன்தினம், வியாழக்கிழமை, நாக்பூரிலிருந்து புனே நோக்கிச் செல்லும் விமானத்தின் விமானியாகிய கேப்டன் மனோஜ் சுப்ரமணியம் (40), விமானத்தில் ஏறச்செலும்போது நிலைகுலைந்து விழுந்துள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமையன்று, டெல்லியிலிருந்து தோஹா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்றில் கூடுதல் விமானப் பணியாளராக பயணித்துக்கொண்டிருந்த மற்றொரு விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவரும் உயிரிழந்துவிட்டார். இரண்டு நாட்களில், இந்திய விமானிகள் இருவர் உயிரிழந்த விடயம் சோகத்தை உருவாக்கியுள்ள நிலையில், இந்த தகவல்களை விமான போக்குவரத்துத்துறை உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, மியாமியிலிருந்து சிலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியான Ivan Andaur (56) என்பவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கழிவறையிலேயே அவர் நிலைகுலைந்து விழுந்து இறந்துவிட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.
Leave a comment