download 6 1 12
உலகம்செய்திகள்

உலக பணக்கார நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு!

Share

உலக பணக்கார நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு!

உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.

2-வது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது. இங்கு 2 லட்சத்து 90 ஆயிரத்து 300 மில்லினியர்கள் வசிக்கிறார்கள். 3-வது இடம் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு கிடைத்துள்ளது. இங்கு 2 லட்சத்து 85 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் உள்ள மொத்தம் 97 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் நகரங்கள் இடம் பிடித்து இருக்கின்றன.

அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, தி பே ஏரியா ஆகிய 4 நகரங்களும், அடுத்ததாக சீனாவின் பீஜிங், சாங்காய் ஆகிய நகரங்களும் இடம்பிடித்துள்ளன. இந்த பணக்கார நகரங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 4 நகரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1422711741165502
இந்தியாசெய்திகள்

இந்தியா-சீனா நேரடி விமானப் போக்குவரத்து: ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர்!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நேரடி விமானச் சேவை, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடம்...

image 29c6aa6e37
உலகம்செய்திகள்

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா பெரும் வான்வழி...

Teachers and Principals Trade Union 1200x675px 24 10 25 1000x600 1
செய்திகள்இலங்கை

கல்வி மறுசீரமைப்பு குழப்பம்: அரசு மெளனம் காப்பதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த தரப்பினரால் எழுப்பப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு அரசாங்கம்...

india supermarket march 16 2021 reuters
செய்திகள்இலங்கை

பண்டிகைக் கால விலைவாசி உயர்வு: முறையாகத் திட்டமிட நுகர்வோர் முன்னணி வலியுறுத்தல்

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு...