images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

Share

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச் சித்தரிக்கும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) படங்களை உருவாக்குவதாக எழுந்த புகார்களை அடுத்து, அதன் முக்கிய வசதிகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுவரை எக்ஸ் (X) தள பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்தி வந்த ‘படம் உருவாக்கும்’ (Image Generation) மற்றும் திருத்தும் வசதி உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இனி மாதக் கட்டணம் செலுத்தும் பிரீமியம் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.

பயனர்கள் தமது கடன் அட்டை (Credit Card) விபரங்களை வழங்க வேண்டியிருப்பதால், தவறான உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களைச் சட்டரீதியாக எளிதில் அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கீர் ஸ்டார்மர், இந்த விவகாரத்தை “அருவருப்பானது மற்றும் சட்டவிரோதமானது” எனக் கண்டித்துள்ளார். தவறு செய்யும் பட்சத்தில் ‘Ofcom’ மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Grok தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 2026 இறுதி வரை பாதுகாப்பாக வைக்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா: இது குறித்து 72 மணித்தியாலங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.இவ்விரு நாடுகளும் தமது கடுமையான கண்டனங்களை உத்தியோகப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளன.

சர்வதேச அழுத்தங்களுக்குப் பதிலளித்துள்ள ஈலான் மஸ்க், “சட்டவிரோதமான உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள், நேரடி குற்றவாளிகள் எதிர்கொள்ளும் அதே சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார். மேலும், எக்ஸ் தளத்தின் பாதுகாப்புப் பிரிவு சம்பந்தப்பட்ட கணக்குகளை முடக்கி, காவல்துறையினருடன் இணைந்து விசாரணை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...