Connect with us

உலகம்

அமெரிக்காவால் மக்களின் எதிர்காலம் பாதிக்கும் – சீனா எச்சரிக்கை

Published

on

1846860 china1

அமெரிக்கா- சீனா இடையிலான உறவு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கீரியும், பாம்புமாக சண்டையிட்டு வருகின்றன.

குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகளும் மோதலை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தநிலையில் சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற கின் காங், முதல் முறையாக சீன பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது – அமெரிக்காவுடனான பிரச்சினை குறித்து அவர் பேசியதாவது:-

அமெரிக்காவின் சீனக் கொள்கை பகுத்தறிவு மற்றும் ஒலி பாதையில் இருந்து முற்றிலும் விலகியிருக்கிறது. சீனா மீதான விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் தவறான பாதையில் தொடர்ந்து வேகமாக சென்றால் மோதல் ஏற்படுவது நிச்சயம்.

அமெரிக்காவின் இந்த பொறுப்பற்ற செயல் இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களையும், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும். தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா அவமதிக்கிறது. தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது.

தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா, சீனாவை ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது – என்று கூறினார்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்22 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 16 செப்டம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 16.09.2024 குரோதி வருடம் ஆவணி 31, திங்கட் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம், கடக ராசியில் உள்ள சேர்ந்த புனர்பூசம், பூசம்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 15 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 15.09.2024, குரோதி வருடம் ஆவணி 30, ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள சேர்ந்த திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 14.09.2024 , குரோதி வருடம் ஆவணி 29, சனிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிஷம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 13 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் ஆவணி 28 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தை...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 12 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2024, குரோதி வருடம் ஆவணி 27, வியாழக்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 09 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 9, 2024, குரோதி வருடம் ஆவணி 24, திங்கட்...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் : 08 செப்டம்பர் 2024 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8, 2024, குரோதி வருடம் ஆவணி 23, ஞாயிற்று...