Kalanidhi
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரு மதத்தவர்கள் எடுத்த முடிவை ஏனையவர்கள் ஏற்பார்களா? கலாநிதி ஆறு திருமுருகன்

Share

தமிழர்களின் திருநாளை ஒரு மதத்தவர்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்.

இவ்வாறு துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்

அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் சேவை நயப்பு விழாவில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்து மக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டவர்கள் நாங்கள் படிக்கின்ற காலத்தில் கிறிஸ்தவ நண்பர்களோடு சேர்ந்து பழகி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

நான் துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போது, என்னை முதன்முதலில் நேரடியாக வந்து வாழ்த்தியவர் தற்போது யாழ் மாவட்ட ஆயராக உள்ள ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, அவ்வாறு நாங்கள் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். ஆனால் தற்போது ஒரு பிரச்சனை காணப்படுகின்றது.

கிறிஸ்தவ மதத்தில் பல சபைகளை உருவாக்கி தமது மதத்துக்கு மதம் மாற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். வறிய நிலையிலுள்ள மக்களுக்கு பணத்தைக் கொடுத்து மதமாற்றம் செய்வதை முன்னெடுக்கிறார்கள்.

அது ஏற்கக் கூடிய ஒரு விடயமல்ல. நாங்கள் இந்துக்கள் எப்போதாவது எமது மதத்திற்கு மதம் மாற வேண்டும் என்று நாங்கள் எங்காவது கேட்டிருக்கின்றோமா நாங்கள் கேட்க மாட்டோம்.

அதேபோலவே ஒட்டுமொத்த தமிழர்களின் திருநாளை ஏனைய மதத்தவர்களை புறந்தள்ளி விட்டு ஒரு மதத்தவர்கள் மாத்திரம்எவ்வாறு தீர்மானிக்க முடியும்?

ஏனைய மதத்தவர்களோடு கலந்துரையாடாது ஒரு மதத்தவர்கள் மாத்திரம் எடுத்த முடிவினை ஏனையவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? 80வீதமாக உள்ள ஏனைய மதத்தவர்களை புறந்தள்ளிவிட்டுஒரு மதத்தவர்கள் மாத்திரம் தமிழர்களின் திருநாளினை தீர்மானிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் இந்துக்கள் கிறிஸ்தவ மக்களுக்கோ,கிறிஸ்தவ துறவிகளுக்கோ எதிரானவர்களல்ல நாங்கள் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றோம்.

இந்துக்களாகிய நாம் எந்த மதத்தவர்களோடும் சண்டை பிடிக்க போவதில்லை ஆனால் நமக்கு ஒரு தாக்கம் ஏற்படும் போது அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது தானே எனவும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...