மீன்பிடிக்க சென்ற சிவலிங்கம் தினேஷ்குமார் என்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா- இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக இன்று (26) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது மனைவி இராசேந்திரகுளத்துப் பகுதிக்குச் சென்று தேடியுள்ளார்.
அப்போது, குளப்பகுதியில் கணவர் சடலமாக காணப்பட்டதை மனைவி அவதானித்துள்ளார்.
மின்னல் தாக்கத்தின் காரணமாக இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment