8 13 scaled
இந்தியாசெய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு?

Share

நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு?

இந்தியாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அண்ணன் சத்ய நாராயணராவ் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து வெளியான ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ஜெயிலர் படம் வெற்றியடைந்ததையடுத்து, ரஜினிகாந்தின் குடும்பத்தினர் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இதனால், ஜெயிலர் படம் வெளியான திரையரங்குகளுக்கு ரஜினிகாந்த் சகோதரரான சத்ய நாராயணராவ் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், நேற்று மாலை திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று ஜெயிலர் படம் பார்த்துவிட்டு ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”சூப்பர் ஸ்டார் பட்டத்தை மக்கள் ரஜினிகாந்திற்கு மட்டும் கொடுத்துள்ளனர். அது பல ஆண்டுகளாகவே அவரிடம் இருக்கிறது.

அவர், இருக்கும் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் கிடையாது. மேலும், அவர் தொடர்ந்து பல திரைப்படங்கள் நடிப்பார். ஏனென்றால், திரையுலகத்தை நம்பி பல தொழிலாளர்கள் இருப்பதால் தொடர்ந்து நடிப்பார்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர்,”நடிகர் ரஜினிகாந்த் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரமாட்டார் என்றும், அரசியலுக்கு வர மாட்டார் என்றும்” கூறினார்.

அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் தங்களுடைய வாக்குகளை அளித்துக்  கொள்ளலாம் என்றும் கூறினார்.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....