மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் மீறப்படுவதால்தான் அரசில் இருந்துகொண்டு எதிரணி பணியை செய்கின்றோம். தொடர்ந்தும் போராடுவோம். மௌனம் காக்கமாட்டோம் – என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
யுகதனவி ஒப்பந்தம் மற்றும் திருகோணமலை உடன்படிக்கை ஆகியவற்றுக்கு எமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம் .இது விடயத்தில் எமது நிலைப்பாடு மாறாது. பின்வாங்கவும் மாட்டோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பில் பேசுவோம்.
20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படும்போது அமைச்சரவையில் மௌனம் காத்து, வாத விவாதங்களில் பங்கேற்காமல் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டோம். அதற்காகவே தற்போது எமது கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து வருகின்றோம்.
அரசை சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.” – என்றார்.
#SriLanaNews
Leave a comment