ff 4
இந்தியாசெய்திகள்

இலங்கைக்கு எப்போதும் ஆதரவு வழங்குவோம்! – இந்தியா தெரிவிப்பு

Share

இந்திய அரசு இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடு என்ற முறையில் அதற்கு உதவ முயற்சிப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக திருவனந்தபுரம் வந்த அவர், விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “நாங்கள் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம். அந்நாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக இருக்கிறோம்,” என்று கூறினார்.

“இப்போது இலங்கையில் அவர்கள் சொந்த பிரச்னைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு இல்லை,”

எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு தேவையான எல்லா உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

“இலங்கையில் உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது.

கடுமையான நெருக்கடி நிலவும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இந்த சூழலை இலங்கையர்களால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...