02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

Share

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட், ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய ஈரான் போருக்குப் பின்னால் ஒரு பாரிய சதித்திட்டம் ஒளிந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தகவல்களை சர்வதேச செய்திச் சேவையான அல்ஜெஸீரா (Al Jazeera) வெளியிட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு முதல் ட்ரம்பின் வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகராகப் பணியாற்றிய ஜோசப் கென்ட், தனது இராஜினாமா கடிதத்தில் மிகவும் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமான உடனே, இஸ்ரேலிய உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சில அமெரிக்க ஊடகங்கள் ஒன்றிணைந்து, ஈரானுக்கு எதிரான ஒரு பொய்ப் பிரசாரத்தை மிக நுணுக்கமாக முன்னெடுத்ததாகக் கென்ட் சுட்டிக்காட்டியுள்ளார். ட்ரம்பின் அடிப்படைக்கொள்கையான “முதலில் அமெரிக்கா” (America First) என்பதையே இந்தச் சதியாளர்கள் திசைதிருப்பி விட்டனர். ஈரானால் அமெரிக்காவிற்கு உடனடி ஆபத்து இருப்பதாகவும், இப்போது தாக்கினால் எளிதில் வெற்றிகொள்ளலாம் என்றும் கூறி ஜனாதிபதி ட்ரம்பைத் தவறாக வழிநடத்திப் போர்ச் சூழலை அவர்கள் உருவாக்கியுள்ளனர் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

முன்பு ஈராக் போருக்குள் அமெரிக்காவை இழுத்துச் செல்வதற்கு எத்தகைய தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டனவோ, அதே பாணியிலான அப்பட்டமான பொய்களே இப்போதும் பயன்படுத்தப்படுகின்றன என்று கென்ட் எச்சரித்துள்ளார். “முடிவில்லாத போர்களில் அமெரிக்காவை ஈடுபடுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த ட்ரம்ப், தற்போது ஒரு பாரிய பொய் வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளார்” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஈரான் மீதான இந்தத் தாக்குதல் அமெரிக்க மக்களுக்கு எந்தப் பலனையும் அளிக்காது என்றும், தேவையற்ற உயிர்ச் சேதங்களுக்கே இது வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜோசப் கென்ட்டின் இந்த இராஜினாமா மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பதிலளித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், கென்ட் பாதுகாப்பில் மிகவும் பலவீனமானவர் என்றும், அவர் வெளியேறுவது நல்லதே என்றும் விமர்சித்துள்ளார். இருப்பினும், உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள ஒரு உயர்மட்ட அதிகாரி, ஈரானால் அமெரிக்காவிற்கு எந்தவொரு உடனடி அச்சுறுத்தலும் இல்லை என்று கூறி பதவி விலகியிருப்பது, ட்ரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே போர் குறித்த பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதைப் பிரதிபலிக்கிறது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...