namal
செய்திகள்இலங்கை

ஜே.வி.பி உடன் புலிகளை ஒப்பிடும் நாமல் !!

Share

டுதலை புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் பெரிய வித்தியாசமில்லையென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெலியத்தவில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெலியத்த பெண்கள் சம்மேளனத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“ஜே.வி.பி.யின் வரலாற்றை பெலியத்த மக்களுக்கு நான் கூற விரும்பவில்லை.நெல் களஞ்சியசாலைகள், வைத்தியசாலைகள், பிரதேச செயலகங்கள் போன்றவற்றுக்கு தீ வைத்தவர்கள் அவர்களே.

இப்போது மின்சாரம் இல்லை என்கிறார்கள். அப்போது டிரான்ஸ்பார்மர்கள் தீப்பிடித்து எரிந்தன. விடுதலை புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் பெரிய வித்தியாசமில்லை.

இதுதான் உண்மையான கதை. ஆனால் இப்போது பழைய விஷயங்களை அகற்றச் சொல்கிறோம். இந்த நாட்டை உருவாக்குங்கள். அரச ஊழியர்களாகிய எங்களுக்கு பொறுப்பு உள்ளது. உரிமைகள் பற்றி மட்டும் பேசி பயனில்லை.

பெண்களை பாதுகாக்கும் கட்சியாக நாங்கள் எப்போதும் செயற்படுகிறோம். அப்போதுதான் இந்த சமுதாயத்தை பாதுகாக்க முடியும். சமுதாயத்தை உருவாக்க முடியும்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...