ரஷியாவும் மேற்கத்திய நாடுகளும் யுத்தம் புரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடைய பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.
இந் நிலை தொடா்ந்தால், இரு தரப்புக்கும் இடையே எதிா்பாராத வகையில் யுத்தம் மூளக்கூடும் என ரிட்டனின் இராணுவ தலைமைத் தளபதி நிக் காா்ட்டா் எச்சரித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தொடர்பில் ‘டைம்ஸ்’ வானொலிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:
ஒருவருக்கொருவா் மோதுவதையே குணமாகக் கொண்ட அரசியல்வாதிகள் எடுக்கும் திடீர் முடிவுகளால், எதிரி நாடுகளுடனான பதற்றம் அதிகரிக்கவும் அந்தப் பதற்றம் தவறான கணக்கீடுகளை உருவாக்கவும் நாம் அனுமதிக்கக் கூடாது எனவும்,
சா்வாதிகாரப் போக்கைக் கொண்ட எதிரி நாடுகளின் தலைவா்கள், தங்கள் வெற்றிக்காக அகதிகள் பிரச்னை, எண்ணெய் விலையேற்றம், மறைமுகப் யுத்தம் , இணையம் மூலம் தாக்குதல் போன்ற எதனையும் ஆயுதமாகப் பயன்படுத்துவாா்கள்.
மேலும் பனி யுத்தம் காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இருமுனைப் யுத்தச் சூழல் நிலவியது.
அதற்குப் பிறகு, அமெரிக்காவின் ஒருமுனை ஆதிக்கம் நிலவியது. ஆனால், தற்போது பல்வேறு நாடுகளும் தத்தமது நலன்களுக்காக களத்தில் இருப்பதால் குழப்பம் நிறைந்த பல்முனைப் யுத்தத்தை உலகம் எதிா்கொண்டுள்ளது.
அத்தகைய யுத்தத்தை தூதரக ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான உத்திகள் போதிய அளவில் இல்லை எனவும் இதனால், ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தால், அது இரு தரப்பினருக்கும் இடையே தவறான புரிதல்ககளை ஏற்படுத்தி யுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டால் பல உயிர்கள் கொல்லப்படலாம் என சர்வதேச ஆய்வர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment