ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தாம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக, பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டிகள் நேற்று முடிவடைந்தன.
நேற்றைய இறுதி ஆட்டத்தில், டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூர் றோயல் சலஞ்சேர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
குறித்த போட்டியில், றோயல் சலஞ்சேர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இப் போட்டியின் பின்னர் கருத்து வெளியிட்ட விராட் கோலி, ஐ.பி.எல் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Leave a comment