unn
செய்திகள்உலகம்

ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !

Share

ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !

இன்று (21) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோத்தாபய  ராஜபச்ச நாளைய தினம் ( 22) விசேட உரையை நிகழ்த்தவுள்ளார் .

இதனைத் தொடர்ந்து 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உணவு மற்றும் வலு சக்தி தொடர்பான உயர்மட்ட அமர்வுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார் .

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய  ராஜபச்ச தலைமையிலான தூதுக்குழுவினர் கடந்த 18ஆம் திகதி நியூயோர்க் நகரை சென்றடைந்தனர்.

இந்த அமர்வின் இரண்டாம் நாள் பிற்பகல் வேளையில் ஜனாதிபதி கோத்தாபய  ராஜபச்ச  உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இம் மாநாட்டு அமர்வின் இடைப்பட்ட காலங்களில் ஜனாதிபதி பல நாட்டு அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...