21552472 tn96
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஷட்-டவுன்: நிதி நெருக்கடியால் அரசாங்கப் பணிகள் ஒரு பகுதி முடக்கம்!

Share

மத்திய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒறவிட்டதை அடுத்து, அந்நாடு இன்று சனிக்கிழமை (31) முதல் ஒரு பகுதி பணிநிறுத்தத்திற்கு (Partial Shutdown) உள்ளாகியுள்ளது.

2026-ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதற்கான காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இந்த நிதி நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில், செனட் சபை நேற்று இரவு ஒரு சமரசத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதில் பெரும்பாலான துறைகளுக்கு செப்டம்பர் வரை நிதி வழங்கவும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு (DHS) மட்டும் இரண்டு வார காலத் தற்காலிக நிதி வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செனட் ஒப்புதல் அளித்த போதிலும், இதற்கான சட்டமூலம் பிரதிநிதிகள் சபையினால் (House of Representatives) இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. பிரதிநிதிகள் சபை தற்போது விடுமுறையில் இருப்பதால், அவர்கள் மீண்டும் கூடும் திங்கட்கிழமை (பெப்ரவரி 02) வரை இந்தப் பணிநிறுத்தம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ‘ஷட்-டவுன்’ காரணமாக கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட சுமார் 75% மத்திய அரசுத் துறைகளின் அத்தியாவசியமற்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஊதியமில்லாத விடுப்பில் செல்ல வேண்டிய நிலை அல்லது ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தச் சமரசத் திட்டத்திற்கு ஏற்கனவே தனது ஆதரவை வெளியிட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை பிரதிநிதிகள் சபை கூடியவுடன் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஏற்படும் இரண்டாவது பணிநிறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...