25 67859df85222e
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்றத்தில் எமது பிரதிநிதித்துவம் இல்லாதது ஒரு பாரிய வெற்றிடம்! – டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்.

Share

கடந்த 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பிரதிநிதித்துவமின்மை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் தேவைகளுக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிகளை அவர் நினைவு கூர்ந்தார்.

மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி வாக்களித்திருந்தாலும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (EPDP) குறைந்தபட்சம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியாவது நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அந்த மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் குரல் ஒலிக்காத காரணத்தால், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை முன்வைப்பதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தேர்தல் பின்னடைவு தற்காலிகமானது என்றும், மக்களின் தேவைகளை உணர்ந்து கட்சித் தொடர்ந்தும் மக்கள் பணியாற்றும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...