diana gamage
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதிக்கு மேலதிகமாக இரண்டு வருடங்கள்! – கோருகிறார் டயானா கமகே

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு மேலதிகமாக இரண்டு வருடங்கள் நாட்டை  ஆட்சிசெய்வதற்கு  வழங்குவதாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் 19  வைரஸ் தொற்று காரணமாக இழந்த இரண்டு வருடங்களை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். அதேநேரம், பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக காலதாமதம் ஏற்பட்டிருந்தால் இந்த இரண்டு வருடங்களில் அனைத்து நெடுஞ்சாலைகளையும் கட்டி முடிக்க முடியும். இந்த நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் ராஜபக்ஷக்களால் கட்டப்பட்டவை. நாங்கள் இங்கு இருக்கும் போது ஜனாதிபதி தோல்வியடைவதற்கு இடமளிக்க மாட்டோம்.

கொவிட் 19 நெருக்கடியால் உலகம் முழுவதும் சிக்கலில் உள்ளது, இன்று இங்கிலாந்தில் வரிசைகள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...