c842803d 7f9c 402b a1f0 0ec7df37819f 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சிக்கினர்!

Share

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருப்பகுதியில் வீடு உடைக்கப்பட்டு 06 பவுண் நகையும், ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளையுடைய நபர்கள் என்றும் அவர்களிடம் இருந்து ஆறரைப் பவுண் நகை மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...