வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வர்த்தக ரீதியான விமானங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா இல்லை என்ற சான்றினை, 72 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளைத் தவிர, பிற நாட்டினருக்கு விமான நிலையத்தில் வைத்து கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5 இலட்சம் இலவச விசாக்கள் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
#india
Leave a comment