image 198c08bba6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதுக்குடியிருப்பில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து! – இருவர் பலி – ஒருவர் படுகாயம்

Share

டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் கேப்பாபிலவு – புதுக்குடியிருப்பு வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

வற்றாப்பளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு பகுதி நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர், எதிர்த்திசையில் வந்த டிப்பருடன் மோதிய நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

டிப்பர் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிலக்குடியிருப்பு கேப்பாபிலவை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து (வயது -48), அதே இடத்தைச் சேர்ந்த சூரியகுமார் கரிதாஸ் (வயது-17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, படுகாயமடைந்த இளைஞன் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் நிறோஜன் (வயது-22) என தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து டிப்பர் வாகனத்தை எடுத்துச்செல்ல அனுமதிக்காது அவ்விடத்தில் மக்கள் கூடியமையால் அவ்விடத்தில் பொலிஸாருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

image 405a87e8d2

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...