யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் கோண்டாவில் சந்தி பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மற்றும் இரு முச்சக்கர வண்டி சாரதிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment