“பொது அறிவு தான் இல்லாவிட்டாலும், பொதுவான அறிவாவது இருக்க வேண்டும் ” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் பேச்சு தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.
மேலும், கௌரவ சாணக்கியனின் பெயரை பிழையான முறையில் சித்தரித்து பேச முற்படும் குறித்த தகுதியற்ற கீழ்த்தரமான பாராளுமன்ற உறுப்பினரால் பாராளுமன்றத்தின் கௌரவமும் மரியாதையும் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.
சபையில் இல்லாத ஒரு கௌரவ உறுப்பினரின் பெயரை சுட்டிக்காட்டி போலிக்குற்றச்சாட்டை முன்வைப்பதும் ஒரு அறிவுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் செயல் இல்லை என்பதையும், இவர்களின் தரத்தையும் தகுதியையும் மக்கள் நன்கு அறிவார்கள். எனவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் சாணக்கியனை ‘முகமது சாணக்கியன்’ என தெரிவித்ததுடன் அவர் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பதில் வழங்க முற்படும் போடும் சுமந்திரன் மற்றும் சிறீதரன் தொடர்பில் மிக அநாகரிகமான முறையில் திலீபன் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment