vaci
செய்திகள்இலங்கை

தடுப்பூசியால் பாலியல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பில்லை! வெளியான அறிவிப்பு

Share

கொரோனா தடுப்பூசியால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இதனை தெரிவித்துள்ளார் .

பொது மக்கள் சமூக ஊடகங்களில் அல்லது பிற ஊடகங்களில் பரவுகின்ற ஆதாரமில்லாத தகவல்களால் ஏமாறாது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுள்ளார் .

18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தயங்குவதாகவும் அதிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியை ஏற்க மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, இந்த தடுப்பூசியை போட்டால் பாலியல் ரீதியான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு , இதன்மூலமாக குழந்தை பாக்கியம் இல்லாது போய்விடும் எனும் கருத்து சமூகத்தில் நிலவுவதாகும்.

அத்தோடு வெளிநாடு செல்வதற்கு காத்திருப்போர் குறித்த சில நாடுகளில் சினோபோர்ம் தடுப்பூசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே தடுப்பூசியை பெற தயங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் .

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...