school
செய்திகள்இலங்கை

டிசம்பர் மாதம் விடுமுறை வழங்கப்படாது! கல்வி அமைச்சு

Share

ஒக்டோபர் மாதம் தொடக்கம் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா  தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படுகின்ற டிசம்பர் மாத விடுமுறை இந்த முறை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள் அனைத்தும் நான்கு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

இதன்படி 200 மாணவர்களுக்கு குறைவானவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளை விரைவாக திறக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் 200 மாணவர்களை விட குறைவானவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் 5, 131 உள்ளன. இதில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 3, 884 எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வகையில் 1-5 வரையான வகுப்புக்களுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கமுடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...