IMG 20220202 WA0035
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! -சுப்பர்மடம் மீனவர்கள்

Share

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை தகுதி வாய்ந்த அதிகாரிகள் எழுத்து மூலமாக தரும் வரை தமது போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப் படகுகளின் ஆக்கிரமிப்பினால் நமது கடல் வளம் அழிக்கப்படுவதுடன் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரு உயிர்களையும் பறித்து எடுத்திருக்கின்றது.

இந்நிலையில் இந்த அராஜகத்திற்கு நிரந்தர முடிவு காணும் நிலையில் மீனவ சமுதாயத்தில் இருந்து பொன்னாலை தொடக்கம் பருத்தித்துறை வரை சாலை மறியல் போராட்டத்தையும் கடற்றொழில் மறிப்பு போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றோம்.

இப் போராட்டத்தை பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயம் ஒன்றிணைந்து மக்கள் போராட்டமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்கு சமாசத்திற்கும் மாவட்ட சம்மேளனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

மக்களால் தொடரப்படும் இந்த போராட்டமானது மீனவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடரும். மேலும் போராட்டத்தை நடத்துவதற்கு பொதுமக்களிடம் ஆதரவு கோரி நிற்கின்றோம்.

இப் போராட்டத்திற்கு வர்த்தக சங்கங்கள் போக்குவரத்து அமைப்புகள் பொது அமைப்புகளின் ஆதரவு வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...