Tissa Attanayake
செய்திகள்அரசியல்இலங்கை

பதவி விலகுவதால் நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை! – திஸ்ஸ அத்தநாயக்க

Share

” இரு அமைச்சர்கள் பதவி விலகுவதால் மட்டும் இந்நாட்டில் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முழுமையாக பதவி விலக வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்சார நெருக்கடியும் உருவாகியுள்ளது. மறுபுறத்தில் வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. நிர்வாகம் தோல்வி கண்டுள்ளது. எனவே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்குவதால் இப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அவ்வாறு தீர்ந்தால் அவர்கள் நீக்கப்பட்டமை சிறந்த முடிவாக அமையும்.

எனவே, முழுமையான அரசும் பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும். அப்போது தகுதியான தரப்பு நாட்டை ஆளக்கூடிய சூழ்நிலை உருவாகும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...