பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதியின் அடிமைகளே என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனி ஒருவர் ஆட்சிக்காகவே 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில், அமைச்சரவையில் உள்ள பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதியின் அடிமைகளே!
அதேவேளை, நாட்டில் இன்னும் இரு வாரங்களுக்குள் அந்நிய செலாவணி இருப்பு பூஜ்ஜிய மட்டத்துக்கு வந்துவிடும். இந்தநிலையில் ஓரிரு வாரங்களுக்குள் நாட்டில் பஞ்சமும் ஏற்ட்டுவிடும்.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையே விநியோகிக்கமுடியாத நிலைமை அரசுக்கு ஏற்படும். நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை விரைவில் ஏற்படும்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment