9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original
செய்திகள்இலங்கை

திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

Share

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் ஒருவர், தன்னை விடுவிக்கக் கோரித் தொடர்ந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உரிய கடவுச்சீட்டு இன்றி தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் திகதி குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். முகாமிலிருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து அவர் கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி சிறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு முகாம் அதிகாரிகள் அந்த இளைஞருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும், அவர் எந்தவித நிபந்தனைகளுக்கும் இணங்க மறுத்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

முன்னதாக இவருடன் மேலும் நான்கு பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நாமக்கல் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த இளைஞனுக்குத் தனது தாயகம் (இலங்கை) திரும்ப விருப்பம் இல்லை என்பதால், அவரை நாமக்கல் மையத்திற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தையும் நிராகரித்துள்ள அவர், தன்னை முழுமையாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னைக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் மற்றும் இந்தியத் தரப்புடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், இளைஞரின் உடல்நிலை மற்றும் சட்ட ரீதியான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...