1599582341 president 2
செய்திகள்இலங்கை

உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் !

Share

உலகத் தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கிறார் !

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ச  ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக  ஜனாதிபதியின் உரை அமையவுள்ளது.

இத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றால் பாதிப்படைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல், பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான வீழ்ச்சியை சரி செய்ய முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை தனித்தனியாக சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

மேலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் முக்கிய பல விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இலங்கைக்கு ஆதரவான நாட்டுத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி அவர்களுடனும் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Lightning
இலங்கை

அம்பாறையில் மின்னல் தாக்கியதில் முற்றாக அழிவடைந்த வீடு.

நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில்...

kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...