சீனாவால் இடைநிறுத்தப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களை நிர்மாணிப்பது தொடர்பான செயற்றிட்டத்தை அதே வடக்கு தீவுகளில் முன்னெடுக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குபோதே இவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய அரசு இலங்கை அரசுடன் இது சார்ந்து பேச வேண்டும். இதற்கு இலங்கை அரசாங்கமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
சுத்தமான மின்சாரம் நம் நாட்டுக்கு தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். சீனா இங்கு இடை நிறுத்திய திட்டத்துக்கு பதிலாக அதனை மாலைத்தீவில் 12 தீவுகளில் முன்னெடுக்க அந்நாட்டு அரசுடன் உடன்பட்டு விட்டது.
இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக இத்திட்டம் இலங்கையில் பல மாதங்களுக்கு முன்னரே இடைநிறுத்தப்பட்டு விட்டது.
இத்தகவலை நம் நாட்டின் நிதி அமைச்சர் புது டில்லி சென்றிருக்கும் தருணத்தில் சீன தூதரகம் வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கையில் வடக்கிலுள்ள தீவுகளில் இந்திய அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கி சிபாரிசு செய்யும் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
#SriLankaNews