WhatsApp Image 2022 03 06 at 10.17.26 AM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெடிபொருட்களை வீட்டில் வைத்திருந்த தம்பதி கைது!

Share

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலைப் பகுதியில் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருந்த கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்படி வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணவனும் மனைவியும் போரின்போது கைவிடப்பட்ட வெடிகுண்டுகளை உடைத்து வீட்டில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்போது வெட்டி எடுக்கப்பட்ட வெடிகுண்டுகளும், வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட குடும்பப் பெண் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டவேளை அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குடும்பத் தலைவனைப் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த நீதிமன்றின் அனுமதியைப் பொலிஸார் பெற்றுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...