1630488474358
செய்திகள்இலங்கை

நாடு எந்நேரமும் முடங்கலாம்!!! – ஹேமந்த ஹேரத்

Share

மீண்டுமொரு முடக்கம் தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களின் நடத்தையே தீர்மானிக்கும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது குறைந்து வருகிறது. சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும் இருக்கின்றனர். இதேவேளை எதிர்வரும் நத்தார் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம்.

தற்போதைய, தீவிரமான சூழ்நிலையிலிருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் இது போன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதையும் பங்கேற்பதையும் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் .

அவ்வாறு விதிமுறைகளை மீறுவோர் சட்டப்படி தண்டணைக்குரியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைகளை காரணங்காட்டி மக்கள் சுதந்திரமாக நடந்துக்கொள்வதால்,இந்தப் பண்டிகைக் காலத்தில் மீண்டும் ஒரு கொவிட் கொத்தணி உருவாகாமல் இருப்பதற்காக நாம் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...