மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் பணிகள் ஈடுபட்டோருக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்துள்ளனர்.
குறித்த துயிலும் இல்லம் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த காலங்களாக இது இராணுவ பிடியில் காணப்படுகின்றது.
அதனால் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
அப்பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருப்பவர்களை சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர் தாமும் துப்பரவு பணியில் ஈடுபடுவதாக கூறி இடையூறு விளைவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment