english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

Share

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (03) இரவு இரண்டு பயணிகள் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

விமான நிலையத்தின் ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானம் , இண்டிகோ ஏர்பஸ் ஏ320 விமானம் இரண்டு விமானங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றையொன்று உரசிக்கொண்டன:

இரண்டு விமானங்களும் மிகக் குறைந்த வேகத்தில் (Taxing) பயணித்துக் கொண்டிருந்தபோது, அவற்றின் இறக்கைகளின் முனைகள் (Wing-tips) ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. விமானங்கள் வேகமாகக் செல்லாததால் ஒரு மிகப்பெரிய அனர்த்தம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.

இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானங்களின் இறக்கை முனைகளில் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த விமானங்கள் உடனடியாக சேவையிலிருந்து நீக்கப்பட்டு, பயணிகளுக்கு மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த விபத்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை (ATC) வழங்கிய அறிவுறுத்தல்களில் ஏதேனும் தவறு நடந்ததா? அல்லது விமானிகளின் கவனக்குறைவா? என்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

 

 

Share
தொடர்புடையது
முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு
இந்தியா

முடிவுக்கு வந்தது விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு.

விவாகரத்து வழக்கு தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக...

Jaishankar
இந்தியா

இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் சிறைக்கலவரங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள தகவல்.

இந்திய உள்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2026 ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள்...

arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...