கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் அனைவரும் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் அண்மையில் 23 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இபருத்தித்துறை நீதவான் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மீனவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவித்த பருத்தித்துறை நீதிமன்றம், அதனை ஓராண்டுக்கு ஒத்திவைத்தத்துடன் நிபந்தனைகளுடன் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, மீனவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளும் அதில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.
விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் கொழும்பில் உள்ள மீரீஹானா முகாமில் தங்க வைக்கப்பட்டு ஒரு சில நாட்களில் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#SriLankaNews
Leave a comment