Kehaliya Rambukwella
செய்திகள்இலங்கை

ஆசிரியர்களின் போராட்டம் வைரஸை பரப்பும் முயற்சியா?

Share

அண்மைக்காலமாக நாட்டில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் கொவிட் வைரஸை பரப்புவதற்கான ஓர் முயற்சியாக இருக்கலாம்.

இவ்வாறு சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசுக்கெதிரான போராட்டங்கள் வைரஸ் பரவலுக்கு விலை கொடுத்துள்ளன. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள், முன்னுதாரணமாக விளங்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை – என்றார்.

இதேவேளை, கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்,

நாட்டில் கோவிட் பரவல் நிலைமையில் சுகாதார வழிகாட்டல்களை மீறி போராட்டங்களை முன்னெடுக்க நாம் அனுமதிக்கமாட்டோம் . நாட்டில் தொற்று நோய் நிலமை இன்னும் சீராகவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.

ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான அடிப்படை மனித உரிமையின் கடுமையான மீறல் ஆர்ப்பாட்டம். தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையிலே நாட்டில் தொற்று நோய் காலத்தில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டத்தையும் நாங்கள் ஏற்கப்போவதுமில்லை மன்னிக்கப்போவதுமில்லை – எனவும் தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...