அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிமெந்து மூடை ஒன்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
950 ரூபா முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட சிமெந்து தற்போது ஆயிரத்து 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
நாட்டில் பல பகுதிகளில் விலை அதிகரிக்கப்பட்டு சிமெந்து விற்பனை செய்யப்படுகிறது என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் நாம் சிமெந்தின் விலையை அதிகரிக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Leave a comment