1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

Share

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை எதிர்வரும் 20-ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 2025 நவம்பர் 29 அன்று ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களுக்குச் சுகாதாரப் பரிசோதகரின் அனுமதியின்றி உணவு வழங்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தடுத்த கிராம அலுவலர் (Grama Niladhari) மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட கிராம அலுவலரால் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இன்று பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட கிராம அலுவலர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, “நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வொன்றில் பங்கேற்க வேண்டியிருப்பதால் அவரால் வரமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், பொலிஸ் பிணையில் உள்ள ஒருவர் நீதிமன்றத் தவணையின் போது நேரில் முன்னிலையாவது கட்டாயமானது என்றும், வராதது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பதில் நீதவான், வழக்கை எதிர்வரும் ஜனவரி 20-ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனைத் தவறாது நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்குக் கட்டளை பிறப்பித்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...