நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு வழங்கபட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ஹெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை சரியாகப் பேணுவதால் நாட்டில் ஒட்சிசன் தேவைப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சுகாதார ஒழுங்கு விதிகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் நாட்டில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment