யாழ்ப்பாணம் – காரைநர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைநகர் பகுதியில் தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளை பாதையை விட்டு விலகிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பயணிகளுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாத போதிலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment