மலேசியாவில் இலங்கைப்பெண் தற்கொலை! – மரணம் தொடர்பில் சந்தேகம்
மலேசியாவில் வீட்டு பணிப்பெண்ணாக இருந்த இலங்கை பெண்ணொருவர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .
பேருவளை- கல்ஹேன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ள நிலையில், கடந்த ஒக்ஸ்ட் மாதம் 24ஆம் திகதி வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.
எனினும் தனது சகோதரியின் மரணம் தொடர்பில் சந்தேகமுள்ளது என அவரது சகோதரி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
Leave a comment