முப்பெரும் நாடுகளின் பிடியில் இலங்கை: எப்படி மீட்டெடுப்பது?

china india srilanka

மூன்று நாடுகள் தமது பலத்தை நிரூபிக்கும் தளமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக ஜேவிபி தொிவித்துள்ளது.

சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பலத்தை நிரூபிக்கும் தளமாகமாகவே நாடு மாறியுள்ளது என ஜேவிபியின் தலைவா் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளாா்

ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் தெற்கு தளம், 13 ஏக்கர்களை கொண்டு சேவைகள் நிலையம் மற்றும் போட்சிட்டி ஆகியன அதிமுக்கிய இடங்கள் சீனாவின் பிடிக்குள் இருக்கின்றன எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜேவிபியின் 32 வது காா்த்திகை வீரா்கள் தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

விசா இல்லாத பயணியைப் போன்ற சீனக் கப்பல், இலங்கையில் இருந்து செல்லாமல், இலங்கையின் கடற்பகுதியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அரசாங்கத்தின் அமைச்சரவை, அமைச்சர்கள் வெளியில் வந்து அரசாங்கத்தை பகிரங்கமாக சாடுகின்றனர்.

எனினும் இதனைக் கருத்திற்கொள்ளாமல், அரசாங்கம் குடும்ப அதிகாரத்தைக்கொண்டு செயற்படுகிறது எனவும் ஜேவிபியின் தலைவா் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளாா்

Exit mobile version