25 68fde7b6a965a
செய்திகள்இலங்கை

இலங்கை மத்திய வங்கி கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்கள் மீது கணக்கெடுப்பு மற்றும் பதிவு கட்டாயம்

Share

இலங்கை மத்திய வங்கி, தற்போதுள்ள கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்காக ஒரு கணக்கெடுப்பை ஆரம்பித்துள்ளது.

தற்போது, இந்தச் சேவை வழங்குநர்களிடமிருந்து ஒரு கேள்வித்தாள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில், இந்தக் கிரிப்டோ சேவை வழங்குநர்கள் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கை, உலகளாவிய ரீதியில் பணமோசடி (Money Laundering) போன்ற நடவடிக்கைகளுக்கு கிரிப்டோகரன்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தக் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, சேவை வழங்குநர்களைப் பதிவு செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...